பஸ் கட்டணம் 12.5% ஆல் அதிகரிப்பு

0

பஸ் கட்டணம் 12.5% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்காவிடில் வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்க போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் தெரிவித்து இருந்தது . பஸ் கட்டணத்தை 12.5% ஆல் அதிகரிக்க அரசாங்கம் அனுமதித்துள்ள காரணத்தினால் வேலை நிறுத்தம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்சித் , பஸ் கட்டணத்தை 15 % ஆல் அதிகரிப்பதற்கு அனுமதி அளிக்குமாறு கோரி இருந்தோம் .ஆனால் அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தது .இப்போது பஸ் கட்டணத்தை 12.5% ஆல் அதிகரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது .இதன் பிரகாரம் ஆக குறைந்த பஸ் கட்டணம் பத்து ரூபாயில் இருந்து 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். .

புதிய பஸ் கட்டண அதிகரிப்பு இம்மாதம் 22 ம் திகதி நள்ளிரவில் இருந்து அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாகவே பஸ் கட்டணம் அதிகரிக்க படவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.