தமிழின அழிப்பு நாளாகிய மே 18 இன்றையதினம் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மிகுந்த உணர்வுடன் நினைவுகூரப்பட்டது .
இன்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஓர் மனதை உருக்கும் உணர்வினை தட்டி எழுப்பும் ஓர் சம்பவம் இடம்பெற்றுள்ளது . நினைவேந்தலில் கலந்துகொண்ட தாயார் ஒருவர் தலைவர் பிரபாகரன் அவர்கள் 2020 இல் மீண்டும் வருவார் .அவரின் பின்னால் எமது இளைஞர் யுவதிகள் அனைவரும் அணிதிரண்டு மீண்டும் போராடி தமிழீழத்தை பெற்றெடுப்பார்கள் என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் .இந்த சம்பவம் முள்ளிவாய்க்காலில் கூடியிருந்த மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது .
தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் மீண்டும் வர வேண்டும் என்பது தான் அனைத்து உணர்வுள்ள தமிழர்களின் ஆசையும் எதிர்பார்ப்பும் ஆகும் .தலைவர் அவர்கள் மீண்டும் வருவாரா என்பதனை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .ஆனால் ஒன்று , தலைவர் அவர்கள் இருந்தால் அவர் தலைவன் .இல்லையேல் அவர் எமக்கெல்லாம் இறைவன் அவ்வளவு தான் .