பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டரும் சிக்குகிறது

0

லண்டன் : 

வாடிக்கையாளர் விபரங்களை கசியவிட்ட பிரச்னையில் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து, டுவிட்டரும் சிக்கியுள்ளது.

பேஸ்புக்கிடம் இருந்து வாடிக்கையாளர் விபரங்களை பெற்று பயன்படுத்தியதாக பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர், மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் இதே பிரச்னையில் டுவிட்டரும் சிக்கியுள்ளதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அதிகாரி அலெக்சாண்டர் கோகன் தெரிவித்துள்ளார். 2014 டிசம்பர் முதல் 2015 ஏப்ரல் வரை டுவிட்டர் நிறுவனம் தமது பயனாளர்களின் பதிவுகள், பெயர், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுக்கு அளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அதிர்ந்து போன டுவிட்டர் நிறுவனம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. அதில், விளம்பரம் தொடர்பான பணிகளில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் சில விபரங்களை பகிர்ந்து கொண்டதாகவும், தனிப்பட்ட உரிமை தொடர்பான விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.