வட தமிழீழம் , கட்டுவன் மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து நிற்கும் படையினர், குறித்த வீதியினை மட்டும் விடுவிக்கும் நோக்கில் தற்போது புதிய தடுப்பு வேலியை அமைத்து வருகின்றனர். வலி. வடக்குப் பிரதேசத்தில் சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் வீதிகள் விடுவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதில் கட்டுவன் சந்தியில் இருந்து மயிலிட்டிச் சந்திக்குச் செல்லும் பிரதான பாதையில் சில மீற்றர் தூரம் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய பிரதேசம் படையினரின் அபகரிப்பிற்குள் உள்ளது. கடந்த ஏப்ரல் 13 ம் திகதி விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் நிலப்பரப்பு காணிகள் பலவற்றிற்குச் செல்லும் பாதைகள் இன்றி நிலம் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த விடயம் தற்போது படையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் குறித்த காணிகளிற்குச் செல்லும் பிரதான வீதியை விடுவிக்கும் நோக்கில், படையினர் தமது முட்கம்பி பாதுகாப்பு வேலிகளை தற்போதுள்ள நிலைகளில் இருந்து சுமார் 50 மீற்றர் பின் நகர்த்தி வருகின்றனர். இதன் மூலம் படையினரின் பிடியில் உள்ள 450 மீற்றர் நீள வீதியும் மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் விடுவிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.