முள்ளிவாய்க்காலில் கதறி அழுத தாய்மார் மீது இனத்துவேசத்தை அள்ளி இறைத்த சிங்களவர்கள்

0

மே 18 தமிழின அழிப்பு நாள் நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. தமிழர் தாயகப்பகுதிகள் அனைத்திலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இறுதிப்போரில் சிங்கள இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்ட தமது உறவுகளுக்கு ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்தார்கள்.

தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகள் மற்றும் இரசாயன ஆயுதங்கள் மூலம் அநியாயமாக கொலைசெய்யப்பட்ட தமது உறவுகளை நினைத்து உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தாய்மார்கள் பலர் கதறி அழுதனர் .இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது .

முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை நினைத்து கதறி அழுத எமது உறவுகளின் புகைப்படங்கள் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் பலவற்றிலும் நிறைந்து காணப்பட்டது .

தாய்மார் கதறி அழும் புகைப்படங்களை பார்த்த சிங்கள இன வெறியர்கள் தமது இன துவேசத்தை அள்ளிஇறைத்துள்ளனர் .தமிழர்கள் அழுவதை பார்க்கும் போது மிகுந்த ஆனந்தமாக இருப்பதாக சில சிங்கள இன வெறியர்கள் தெரிவித்துள்ளார்கள் .

மேலும் சிலர் , இந்த அழுகை மற்றும் கதறல்கள் போலியானவை என்றும் யுத்தத்தில் எமது இராணுவ வீரர்களும் இறந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்கள் .

நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அழுது கதறிய தமிழர்களும் மண்ணில் புதைந்து போக வேண்டும் என்றும் ,இவர்களை விட்டு வைத்தது நாம் செய்த முட்டாள்தனம்  என்றும் , இந்த நாடு சிங்களவர்களுக்கு உரியது என்றும் பலர் தெரிவித்துள்ளார்கள் .

சிங்கள காடையர்களின் இந்த மனசாட்சி இல்லாத கருத்துக்களினால் தமிழ் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளதுடன் தமிழ் இளைஞர்கள் கொதிப்படைந்துள்ளார்கள் .

இலங்கை தீவில் ஆட்சிகள் மாறலாம் .ஆட்சியாளர்கள் மாறலாம் .ஆனால் தமிழர்கள் தொடர்பான அவர்களின் மன சிந்தனைகளில் ஒருபோதும் மாற்றம் ஏற்படப்போவதில்லை .இது 60 வருட கால வரலாறு எமக்கு கற்பித்த பாடம் .

சிறு வயதில் இருந்தே இலங்கை என்பது சிங்கள பௌத்த நாடு ,இந்த நாடு சிங்களவர்களுக்கு உரித்தானது என்று சிங்கள பிள்ளைகளின் மனதில் ஆழமாக பதிக்கப்படுகின்றது .இதன் விளைவே சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் .

நாம் நல்லிணக்கம் என்று பல விட்டுக்கொடுப்புகளை செய்தாலும் சிங்களவர்கள் மாறுவதாக இல்லை .அவர்களின் தமிழர்கள் தொடர்பான சிந்தனை மாற வேண்டும் எனில் மகாவம்சம் நூல் எரிக்கப்படல் வேண்டும் .எரிக்கப்பட்ட பின் பிறந்து வளரும் ஒரு சிங்கள குழந்தையிடம் தான் மாற்று சிந்தனையை எதிர்பார்க்க முடியும் .

சாதாரணமாக எமது உணர்வுகளை கூட புரிந்துகொள்ள முடியாத மனிதாபிமானம் அற்ற காட்டுமிராண்டிகளுடன் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்?

30 வருட கால சாத்வீக போராட்டம் , 30 வருடகால ஆயுத போராட்டம் எமக்கு கற்று தந்த வரலாற்றினை மறந்து நாம் இன்னும் அதே சுப்பரின்ர கொல்லைக்குள்ள நின்று சுற்றி கொண்டு இருக்கின்றோம் என்பது தான் உண்மை .

Leave A Reply

Your email address will not be published.