முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- நாளை திருகோணமலை சிவன் கோயிலடியில்!

0


முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்திற்கானது நாளை 18ம் திகதி மாலை 5.30 மணிக்கு சிவன் கோயிலடியில் இடம்பெறவுள்ளது.

தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்டக்கிளையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வு சிவன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜையினைத் தொடரந்து நினைவுச் சுடர் ஏற்றுதல் மற்றும் தலைவர்களின் உரைகள் எனபன இடம்பெறவுள்ளது.எனவே பொது மக்கள் ஆதரவாளர்கள் அனைவரும் எம் உறவுகளுக்காக இணைந்து அவர்களை நினைவேந்த கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.