ரூ.13 லட்சத்திற்கு கோட் அணிந்த மோடி.. டிவிட்டரில் புகைப்படம் வெளியிட்டு கிண்டல் செய்த குத்து ரம்யா!

0

டெல்லி:

ரூபாய் 13 லட்சத்திற்கு கோட் அணிந்திருந்த பிரதமர் மோடியை கிண்டல் செய்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) டிவிட் செய்துள்ளார். கர்நாடகா தேர்தலை முன்னிட்டு தற்போது டிவிட்டரில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களுக்கும் பாஜக செய்தி தொடர்பாளர்களுக்கும் இடையில் பெரிய போரே நடந்து கொண்டு இருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் திவ்யா ஸ்பந்தனா முழு பார்மில் டிவிட் செய்து பாஜகவினரை திணறடித்துக் கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் ஒன்றில் சில வாரம் முன்பு அணிந்து இருந்த கோட்டின் விலையை கண்டுபிடித்து டிவிட் செய்துள்ளார். மோடி அணிந்து இருந்த கோட்டின் பெயர் லோரோ பியானா ஜாக்கெட் ஆகும். திவ்யா தனது டிவிட்டில் ”மிகவும் பேன்சியாக உள்ளது. நீங்கள் அணிந்து இருக்கும் லோரோ பியானா ஜாக்கெட் மிகவும் பிடித்துள்ளது. வெறும் 17,000 யூரோதான். ரொம்ப கம்மி விலை. யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி இதை வாங்கினீர்கள் மோடி? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

உலகில் உள்ள மிகவும் விலை உயர்ந்த ஆடைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் தற்போதைய இந்திய மதிப்பு, ரூபாய். 1363324 ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.