லண்டனின் முக்கிய நகர சபையின் நகர பிதாவாக ஈழத் தமிழர் தெரிவு

0

லண்டனின், கிங்ஸ்ரன் நகர பிதாவாக வைத்தீஸ்வரன் தயாளன் நேற்றைய தினம் பதவியேற்றுள்ளார். கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில்ல ரொல்வத் வட்டாரத்தில் லிபரல் டெமோக்கிரட்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் பெருமளவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இவர் போட்டியிட்ட லிபரல் கட்சி 39 ஆசனங்களையும், எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சவேட்டிவ் கட்சி 9 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. இந்த நிலையில், கிங்ஸ்ரன் நகரத்தின் 183ஆவது மேயராக வைத்தீஸ்வரன் தயாளன் பதவியேற்றார். இதற்கு முன்னர் கிங்ஸ்ரன் நகரசபையின் உறுப்பினராக இருந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். 40 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகின்றார். தெல்லிப்பழை மகாஜானக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், பிரிட்டனில் அந்தப் பாடசாலையில் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.

இனசமத்துவத்துக்கான அமைப்பு, தமிழர் துடுப்பாட்டக் கழகம் உள்ளிட்ட சங்கங்களில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்பகால நிர்வாகச் செயலர் ரி.எம்.சி.வைத்தீஸ்வரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.