லம்போகினி கார் உலக அளவில் பிரபலம் பெற்ற ஓர் கார் . இந்த காருக்கு சவால் விடுக்கும் அளவுக்கு இலங்கையில் புதிய வகை கார் வடிவமைக்க பட்டுள்ளது.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாயவின் ஆலோசனைக்கு அமைவாக 2013 ம் ஆண்டு மருதானை டிரிபோலி மார்க்கெட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் பின்னர் மருதானையில் ஆரம்பிக்கப்பட்ட வேகா இனவேஷன் என்ற நிறுவனம் 2014 ம் ஆண்டு கார் தயாரிக்கும் பணியை ஆரம்பித்தது .மொரட்டுவ பல்கலைக்கழக பொறியலாளர்கள் மற்றும் உள்ளூர் பொறியியலாளர்களின் கண்காணிப்பின் கீழ் தயாரிக்கப்படும் இந்த காரின் தயாரிப்பு பணி கிட்டத்தட்ட முடிவந்துள்ளதுள்ளது .
இலங்கையரின் மூளையை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த காரின் தயாரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது .
லம்போகினி காரினை விஞ்சும் அளவுக்கு இதன் வடிவமைப்பு காணப்படுகின்றது .இந்த காரின் பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றி பெற்று சந்தையில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் இலங்கையர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை .