வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக ஆவதற்கான தகுதி தமக்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு தாம் போட்டியிட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பும் பட்சத்தில் போட்டியிட தயார்.
அவ்வாறாயின் தாம் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு நிச்சியம் போட்டியிடுவேன் எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வடக்கின் முதல்வராக இம்முறை பதவியேற்பேன் என்றும் விக்கினேஸ்வரனுக்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருப்பதாக யாழில் இருந்து வரும் பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.