வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்

0

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது பேச்சுவார்த்தைக்கான தகுந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த அந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

”பெருங்கோபம் மற்றும் திறந்த விரோதத்தின்” அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வடகொரியா குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் ஜூன் 12 அன்று உச்சிமாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் கிம்முக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கிம்மை ‘மற்றொருநாள்’ சந்திக்க மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

‘ உங்களுடன் அங்கு உச்சிமாநாட்டில் பங்குபெற நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் சோகம் என்னவெனில் உங்களது சமீபத்திய அறிக்கையில் திறந்த விரோதமும் கோபமும் வெளிப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நான் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த தற்போதைய சந்திப்பில் பங்கேற்பது பொருத்தமானதாக இருக்காது என உணர்கிறேன்” என டிரம்ப் கூறியுள்ளார்.

” உங்களது அணுசக்தி திறன்கள் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் எங்களுடையது மிகவும் வலிமையானது மேலும் நான் அவற்றை ஒரு போதும் பயன்படுத்துவதற்கான தேவை வரக்கூடாது என கடவுளிடம் வேண்டுகிறேன்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.