பறித்தெடுக்கப்பட்ட கடல் தொழில் மற்றும் விவசாய நிலங்களாகக்கொண்ட கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற பிரதேசங்கள் போன்று வடமராட்சி கிழக்கும் பறிபோய்விடும் நிலமை ஏற்படுமா?
1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறிலங்கா படைகள், மற்றும் சிங்கள மக்களால் இப்பிரதேசங்களில் இருந்து துரத்தப்பட்ட தமிழர்கள் யுத்தம் முடிந்த பின்னர் மீள்குடியேற்றத்தின் பின்னர் அனைத்தையும் இழந்துபோய் நிர்க்கதியாகி நின்ற நிலமை வடமராட்சி கிழக்கும் பறிக்கப்பட்டுவிடுமோ என்று தோன்றுகிறது.
முன்னைய காலங்களில் தாளையடி மற்றும் புதுமாத்தளன் பகுதியில் சில சிங்கள மீனவர்கள் நிரந்தரமாக மீன்பிடித்து தங்க முயற்சிசெய்திருந்த வேளை அப்பகுதி தமிழ் மக்களின் போராட்டத்தால் அகற்றப்பட்டிருந்தனர்.
தற்பொழுது மீண்டும் சிங்கள மீனவர்களின் ஆக்கிரப்பு தமிழ் மீனவர்களின் தொழிலுக்கு மட்டுமல்ல. கடற்கரை பிரதேசங்களும் அவர்களின் ஆளுகைக்குள் பறிபோய்விடும் என்றே தெரிகின்றது. நல்லிணக்கத்தின் உச்சக்கட்டம் இதுதான் போல….
-சுரேன் கார்த்திகேசு, பத்திரிகையாளர்