வெளிநாடுகளில் தொழில் செய்கின்ற இலங்கையர்களிடம் இருந்து சமூக வலைத்தளங்கள் ஊடாக குழுவொன்று மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு எனப் பல்வேறு பெயர்களில் இந்த கும்பல் இயங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் தொழில் செய்கின்ற இலங்கையர்களை சமூக வலைத்தள குழுக்களில் இணைத்துக்கொண்டு, பல்வெறு திட்டங்களுக்கு பணம் சேகரிப்பதாக கூறி, இவ்வாறு மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இந்த மோசடி தொடர்பான தகவல்கள் தெரிந்தால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சட்ட விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளரிடம் முறையிடுமாறும், முறையீட்டாளரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.