வைத்தியர்களின் வேலை நிறுத்ததினால் நோயாளிகள் பாதிப்பு

0

நல்லாட்சி அரசுக்கு எதிராக வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக நோயாளிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது .

இலங்கை அரசு அண்மையில் சிங்கபூருடன் கைச்சாத்திட்டுள்ள FTA உடன்படிக்கை மற்றும் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ETCA உடன்படிக்கை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர் .இதன் காரணமாக அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளிகள் அசௌகரியத்தினை எதிர்கொண்டுள்ளதாக எமது இணையத்தின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார் .

நாட்டில் இடம் பெறும் அனைத்து பிரச்சனைகளிலும் இலங்கை மருத்துவர் சங்கம் மூக்கை நுழைப்பதினால் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர் .அரசாங்கம் எடுக்க வேண்டிய முடிவுகளில் வைத்தியர்கள் மூக்கை நுழைத்து நோயாளிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது தொடர்பில் மக்கள் கடும் விசனம் அடைந்துள்ளதாக அறியமுடிகின்றது .

Leave A Reply

Your email address will not be published.