2020இற்குப் பின் ஜனாதிபதி கோத்தபாயவா?

0

எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இதன்போது பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சிங்கள வானொலி ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டிருந்தார். எனினும் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவின் அனுமதி தேவைப்படுகிறது என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட்டால் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவின் உதவியும் அதிகமாக கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர்இ இதற்காக ஒன்றிணைந்த எதிரணி உட்பட பலரது ஒத்துழைப்புக்களும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதேவேளை வடக்கில் போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்த விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்ட கோட்டாபய ராஜபக்சஇ

வடக்கு மக்கள் தங்களது உறவுகளை நினைவுகூரவில்லை என்றும்இ இவ்வாறான செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியிருக்கவே கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு எந்தவித இடையூறுகளையும் விளைவிக்காத ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்பாக கடும் கண்டனத்தை வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ச விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர்வதற்கு அனுமயளித்திருக்கவே கூடாது என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் போட்டியிட்டால் தமிழ் மக்களின் வாக்குகளை உங்களால் பெறமுடியுமா என்று இதன்போது கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார். அதேபோல முஸ்லிம் மக்களுக்குள் கொண்டுசெல்லப்பட்ட பிழையான சிந்தனைகளால் அவர்களும் பின்வாங்கினார்கள். அதனை அவர்களை சந்திப்ப பல தருணங்களில் உணர்ந்துகொண்டதோடு அதனை தெளிவுபடுத்தவும் முயற்சி செய்தேன். இந்நிலையில் எனக்கு தமிழ் பேசும் மக்களின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.