காதலுக்கு வயது இல்லை என்று சொல்வார்கள் . அதை நிரூபிக்கும் படியாக 13 வயது சிறுவன் ஒருவன் 23 வயது பெண்ணை காதலித்து கரம் பிடித்துள்ளான்.இந்த வினோத சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது .
இந்தியாவின் ஆந்திராவில் உள்ள உப்ரஹா என்று ஓர் கிராமம் உள்ளது .இந்த கிராமத்தில் வசிக்கும் 13 வயது சிறுவனுக்கும் 23 வயது பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்ந்தது . கடந்த மாதம் 27 ம் திகதி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தார்கள் .
சிறுவனுக்கு வெறும் 13 வயது என்பதன் காரணமாக 23 வயதான மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ( ஆஹா வடை போச்சே ). சிறுவனுக்கு 21 வயது ஆனதும் இருவரும் சேர்ந்து வாழ முடியும் என்று அந்த ஊரின் இணை ஆட்சியர் தெரிவித்துள்ளார் .சிறுவன் 21 வயதை அடையும் வரை கணவன் மனைவி இருவரும் அவரவர் வீட்டில் பெற்றோருடன் தான் வசிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம் .