90 நிமிடங்களுக்குள் 26 மாடி கட்டடத்திற்கு நடந்தது என்ன?

முற்றாக உடைந்து வீழ்ந்த திகில் காட்சி

0

பிரேசிலில் 26 மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தம் காரணமாக முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

பிரேசில், சாப் பாலொவ் நகரில் உள்ள 26 மாடி கட்டடம் ஒன்றிலியே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

26 மாடி கட்டடம் தீப்பற்றிய பின்னர் உடைந்து விழும் திகில் காட்சிகள் சர்வதேச ஊடகங்களினால் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு அதிகாரிகள் 150க்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டு 90 நிமிடங்களுக்குள் இந்த கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதாக பிரேசில் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.