அத்துமீறி வீடொன்றில் நுழைந்து அட்டகாசம் செய்த மர்ம நபர்கள் ! யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்

0

அத்துமீறி வீடொன்றில் உள்நுழைந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டில் இருந்தவர்களை மிரட்டி அட்டகாசம் புரிந்துள்ளார்கள் .இந்த சம்பவம் யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டு பகுதியில் நடந்துள்ளது .

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில் , கடந்த சில காலத்திற்கு முன்னர் யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்பாக எமது மகன் கடையொன்றினை நடத்தி வந்தார். அக் கடை இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.அதனை அடுத்து எமது மகன் வெளிநாட்டில் சென்று தற்போது அங்கு வசித்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பாக எமது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரு நபர்கள் எமது மகன் லோஜன் வெளிநாட்டால் வந்துவிட்டாரா ? எப்ப வருவார் ? என மிரட்டும் பாணியில் எம்மை விசாரித்து சென்று இருந்தனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு எமது வீட்டுக்குள் புகுந்த கும்பல் எமது வீட்டு யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை அடித்து உடைத்து எம்மை அச்சுறுத்தி சென்றனர்.அது தொடர்பில் நாம் பொலிஸ் அவரச சேவை பிரிவுக்கு தொலைபேசி ஊடாக அறிவித்திருந்தோம்.இன்று காலை எமது வீட்டுக்கு வந்த யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு எமது வாக்கு மூலங்களை பதிவு செய்து சென்றனர்“ என தெரிவித்தார்.தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது .

Leave A Reply

Your email address will not be published.