யாழ்ப்பாணத்தில் இராணுவமும் தமிழ்ச் சிறுவர்களும் சேர்ந்து கிரிக்கெட் ஆடும் ஒரு காட்சி பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள பிராந்திய பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் ஸ்டாலின் தன் முகப்புத்தகத்தில் பதிவு செய்த குறிப்பு இது.
அந்த இடத்தில 2 இடங்களில் விக்கட் நடப்பட்டிருக்கும், ஒரு பக்கம் இராணுவமும் மறு பக்கத்தில் எங்கள் தமிழ் சிறுவர்கள் கிரிக்கெட் விழையாடி கொண்டிருப்பார்கள்.
இது கண்டது சரியாக ஒரு வருசமிருக்கும் (2017)
நேற்று அதே இடத்தில நான் கண்டது.. (2018)
தனித் தனியாக விழையாடி கொண்டிருந்த எங்கள் சிறார்களும் இராணுவமும் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விழையாடி கொண்டிருந்தார்கள்.
இது நடைபெறும் இடம் யாழ்.நீதிமன்ற கட்டத் தொகுதிக்கு பக்கத்தில இருக்கிற யாழ்.மாநகர சபை மைதானம் தான்.
அப்ப ஒரு வருசத்துக்குள்ள இந்த மாற்றம் கண் முன்னால நடந்திருக்கு!
இனி இந்த மாற்றம் பிறந்த நாள் கொண்டாட்டம் அது இது எண்டு நண்பர்கள் எண்ட உறவுமுறைக்கு போகாதெண்டு யாரும் சொல்ல முடியாது.
நேற்று கூட யாழ்.பொது நூலக நினைவு நிகழ்வுகள் இங்கால நடந்து கொண்டிருக்க அங்கால எங்கள் எதிர்காலமும் இராணுவமும் சேர்ந்து கிரிக்கெட் விழையாடுது.
இதில் அந்த சிறுவர்களை குறை சொல்ல முடியாது. காரணம் அந்த காணிக்யை பயனபடுத்ததாமல் இராணுவத்தை கிரிக்கெட் விழையாட விட்டு பார்த்துக்கொண்டிந்தது.
எங்களின் தவறு !
இவ்வாறு தான் இராணுவ மயமாக்கலுக்குரிய வழிகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்!
நேற்று தான் ஒரு போஸ்ட் போட்டனான்!
“எரித்தாலும் பீனிக்ஷாய் எழுவோம்” எண்டு ??
#Militarization #இராணுவமயமாக்கல்
-ஸ்டாலின், யாழ் பிராந்திய பத்திரிகை ஒன்றின் செய்தியாளர்.
0
சிறுவர்களின் மனங்களில் இராணுவத்தினர் வன்முறையை விதைப்பது, அவர்களை துஷ்பிரயோகப்படுத்துவது, அவர்களின் எதிர்காலத்தை திசை திருப்புவதுபோன்ற விளைவுகள் இவ்வாறான நிலைகளினாலேயே உருவாக்கப்படுகின்றன.