ஆலயத்தில் மலர்ந்த தமிழீழம் ! ஈழம் அது வெறும் பேச்சு அல்ல தமிழர்களின் உயிர் மூச்சு- படங்கள் உள்ளே

0

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் நேற்றைய தினம் அம்பாள் உலா வந்துள்ளார்.மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

நேற்றைய தினம் பூங்காவன திருவிழா நடைபெற்றது. இதன்போது ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த பூங்காவன திருவிழா நடைபெற்றது.

மேற்படி திருவிழாவின் வெளி வீதியில் அம்பாள் ஊர்வலம் வந்த போது தமிழீழ வரைபடத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வந்தார். மிகப்பெரிய தமிழீழ வரைபடத்துடன் அம்பாள் ஊர்வலம் வந்தமையால் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

சிங்கள பேரினவாதம் அபிவிருத்தி மற்றும் அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி தமிழீழ கனவை சிதைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் தமிழ் மக்களின் மனதில் தமிழீழம் என்ற வேட்கை இன்னமும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழா சான்று .

Leave A Reply

Your email address will not be published.