இதய நோயினால் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெற்றோர் -இதயமற்ற கடவுளின் செயல்

0

இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார் .இந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது .ஏற்கனவே இரண்டு இரண்டு பிள்ளைகள் இதய நோயினால் இறந்துள்ள நிலையில் மூன்றாவது பிள்ளையும் நேற்று இறந்துள்ளார் .

வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர் .இருதய நோய்க்கான சிகிச்சையை இரண்டு சிறுமிகளும் பெற்றுவந்த போதிலும் சிகிச்சை பலனளிக்கவில்லை .

கடந்த 22.05.2018 அன்று குறித்த சகோதரிகளில் 8 வயதான தன்சிகா என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதேவேளை அவரது சகோதரியான 7 வயதான சரனிக்கா எனும் சிறுமி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(18.06.2018) காலை உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சகோதரிகளின் மூத்த சகோதரனும் தனது ஏழு வயதில் இதே நோயினால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமது மூன்று பிள்ளைகளையும் இருதயநோயினால் பறிகொடுத்த பெற்றோரின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதனை உணர முடிகின்றது .இந்த சம்பவம் வவுனியா மக்களை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

கொலை செய்பவர்கள் கொள்ளை அடிப்பவர்கள் கற்பழிப்பவர்கள் ,கருணா போன்று காட்டிக்கொடுப்பவர்கள் கருணாநிதி போல தமிழினத்தை அழிக்க சோரம் போனவர்கள் அனைவரும் எண்பது வயது தொண்ணூறு வயது வரை ஆரோக்கியமாக வாழும் போது எந்த கெடுதலும் செய்யாத இந்த பச்சிளம் குழந்தைகளை பறிக்க கடவுளுக்கு கருணை இல்லையா என்று மக்கள் கவலையடைந்துள்ளார்கள் .இந்த சம்பவம் முகநூலில் அனைவரது மனங்களையும் கசக்கி பிழிந்துள்ளது .

Leave A Reply

Your email address will not be published.