இந்துமத அமைச்சராக முஸ்லீம் -தமிழ்மக்களின் தலையில் மத்தளம் அடிக்கும் மைத்திரி

0

இந்து விவகார பிரதி அமைச்சராக காதிர் மஸ்தான் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார் . இன்றையதினம் புதிதாக ஐந்து பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்..

தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரி முஸ்லீம் ஒருவரை இந்துமத பிரதி அமைச்சராக நியமித்ததன் மூலம் தமிழ் மக்களின் முகங்களில் சேற்றினை அள்ளி இறைத்துள்ளார் .

நல்லிணக்கம் என்ற பெயரில் இந்த நல்லாட்சி அரசு நரியாட்சி நடாத்தி தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்து வருகின்றது . முஸ்லீம் ஒருவருக்கு இந்து மதம் பற்றி என்ன தெரியும் ?ஒரு முஸ்லீம் அமைச்சரால் இந்து மத விவகாரங்களை எவ்வாறு கையாள முடியும் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் .

மேலும் புத்த சாசன அமைச்சராக ஒரு தமிழரை அல்லது முஸ்லீம் மத விவகார அமைச்சராக ஒரு தமிழரை இந்த நல்லாட்சி அரசு நியமித்து அழகு பார்க்குமா ?அவ்வாறு நியமித்தாலும் சிங்கள மற்றும் முஸ்லீம் சமூகம் அதனை ஏற்று கொள்ளுமா ?ஆக எதை செய்தாலும் தமிழர்கள் இளிச்சவாய்கள் .எதுவும் கூற மாட்டார்கள் என்ற போக்கிலேயே நல்லாட்சி அரசு செயற்பட்டு வருகின்றது .

காதிர் மஸ்தான் இந்துமத பிரதி அமைச்சராக தெரிவுசெய்யப்பட்டமை ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனங்களையும் புண்படுத்தியுள்ளது .மைத்திரியின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது .முஸ்லீம் ஒருவர் இந்துமத அமைச்சராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் தேசிய சகவாழ்வு , கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் திரு .மனோ கணேசன் அவர்கள் உடனடியாக தலையிட்டு தமிழர் ஒருவரை இந்துமத பிரதி அமைச்சராக நியமிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என ஈழம் நியூஸ் இணையம் கோரிக்கை விடுக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.