இந்து மாமன்றத்தினர் வடமாகாண ஆளுனருடன் சந்திப்பு

0

இந்து சமய விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமை நாடளாவிய ரீதியில் இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கி இருந்தது .

இந்து அல்லாத ஒருவரை இந்து சமய விவகார பிரதி அமைச்சராக நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பாகங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ள பட்டது .நல்லை ஆதீன முதல்வர் மற்றும் துர்க்கா தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன் இந்து மாமன்றத்தின் செயலாளர் உட்பட்ட பிரதிநிதிகள் இந்த விடயம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

நல்லை ஆதீன முதல்வர் மற்றும் துர்க்கா தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன் இந்து மாமன்றத்தின் செயலாளர் உட்பட்ட பிரதிநிதிகள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களி நேரில் சந்தித்து இந்த விடயம் தொடர்பில் நேற்றையதினம் கலந்துரையாடியுள்ளார் .

இந்து மாமன்றத்தினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதியமைச்சர் பதவி மாற்றப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்ததாக மதத் தலைவர்களிடம் வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி அமைச்சர் நியமனம் தொடர்பாக எழுந்த பாரிய எதிர்ப்பினால் காதர் மஸ்தானிடம் இருந்து இந்து சமய விவகார அமைச்சு பதவி மீளப்பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.