இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ்பாணத்தினை சேர்ந்த இளைஞர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் வாகீசன்,இவர் ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் கூடைப்பந்தாட்ட வீரர்.மூன்று வருடங்களுக்கு முன்பு இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் விளையாடிய வாகீசன் மீண்டும் தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார் .
2011 ஆம் ஆண்டு இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட வாகீசன் 2014 வரை தொடர்ந்து 4 வருடங்கள் ( 2011, 2012, 2013, 2014 ) இலங்கை கூடைப்பந்தாட்ட அணியில் இடம்பெற்றிருந்தார்.
இம்மாதம் 25ம் திகதி வங்களாதேசத்தில் நடைபெற இருக்கும் தென்னாசிய கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணியோடு வாகீசன் வங்களாதேசம் பயணிக்கவுள்ளார் .
இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் இடம் பிடித்த முதலாவது வீரர் மற்றும் வடமாகாணத்தில் இருந்து தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு வீரர் வாகீசன் என்பது குறிப்பிடத்தக்கது .