பொருளாதார ரீதியாக நிவாரணம் வழங்கும் முகமாக முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்காக எரிபொருள் சந்தையில் புதிய பெற்றோல் வகையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையிருந்தது. நாம் அதை விரும்பி செய்யவில்லை. ஆனால் சில நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்காகவே எமது விருப்பத்திற்கு மாறாக செயற்பட வேண்டியிருந்தது.இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரிய நிலை தொடர்பாகவும் நாம் அறிந்திருந்தோம். தற்போது நாம் பொதுமக்களுக்கு எவ்வாறு வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்கலாம் என ஆலோசித்து வருகின்றோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்
புதியவகை எரிபொருள் தொடர்பாக பல பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .பரிசிசோதனைகள் முடிவடைந்த பின்னர் இந்த புதியவகை எரிபொருளினை சந்தையில் எதிர்பார்க்கலாம் .