இளநீர் போன்று சுவையான நீர் உள்ள அதிசய கிணறு இலங்கையின் புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
மயிலன்குளம் பிரதேசத்தை சேர்ந்த கருணாவத்தி என்பவர் தாவரங்களை பயிரிடுவதற்காக நிலத்தை சுத்தப்படுத்திய போது 8 – 10 அங்குல அளவு களிமண்ணினால் நிறைவு செய்யப்பட்ட சட்டி போன்ற துண்டு ஒன்றினை கண்டுள்ளார் .மண்வெட்டியால் மேலும் வெட்டிய போது அந்த இடத்தில் சிறிய அளவிலான கிணறு ஒன்று இருப்பதனை அவதானித்துள்ளார் .இந்த விடயத்தை பிரதேச மக்களிடம் கருணாவத்தி கூற அனைவரும் சேர்ந்து கிணற்றினை சுத்தப்படுத்தியுள்ளார்கள் .
கிணறு சுமார் 8 அடியை ஆழத்தை கொண்டுள்ள போதிலும், அது 40 அடி ஆழத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது .இந்த கிணற்றில் உள்ள நீர் இளநீர் போன்று சுவையாக உள்ளதாக பிரதேசவாதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிசய கிணறு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் வேறு பல தொல்பொருளியல் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இக்கிணறு 500 ஆண்டுகளுக்கும் அதிக பழைமையான கிணறு என்று தொல்பொருளியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.