ஈழ மக்களின் மனங்களில் மாத்திரம் அல்ல ஈழக் குழந்தைகளின் மனங்களிலும் மாவீரர்கள் என்ற மகத்தான வீரர்கள் பற்றிய உயர்ந்த எண்ணம் நிறைந்தே உள்ளது. படத்தில் காணப்படும் மாவீரர் துயிலும் இல்ல மாதிரியை செய்தவர் ஈழக் குழந்தை ஒருவர்.
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை இல்லம் முன்பள்ளியில் மாணவர்களின் கண்காட்சியில் இவ் மாதிரி மாவீரர் துயிலுமில்லம் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சி சென்ற அனைவரது கண்களையும் ஈர்த்தது இந்தப் படைப்பே.
சிங்கள அரசால் தமிழீழ மாவீரர் துயிலும் இல்லங்கள் அழித்தொழிக்கபட்டிருந்தன. எனினும் கடந்த இரு ஆண்டுகளாக மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவாக்கி மாவீரர்களுக்கு மக்கள் விளக்கேற்ற வருகின்றனர்.
இந்த நிலையில் முன்பள்ளிக் குழந்தைகளின் கண்காட்சி ஒன்றில் இத்தகைய படைப்பை வைத்திருப்பது ஈழத் தமிழ் நெஞ்சங்களின் ஆழ்மனக் கூட்டில் மாவீரர்களை பூசிக்கும் மாவீரர் துயிலும் இல்லம் பற்றிய ஏக்கம் மிகுந்திருப்பதையே காட்டுகிறது.