எனது பிரதி சபாநாயகர் பதவியை கூட்டமைப்பினர் தட்டி பறித்து விட்டனர் -அங்கலாய்க்கும் அங்கஜன்

0

தனக்கு கிடைக்க இருந்த பிரதி சபாநாயகர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேண்டும் என்று கிடைக்காமல் தடுத்து விட்டனர் என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் .

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அங்கஜன் , எனக்கு கிடைக்க இருந்த பிரதி சபாநாயகர் பதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தடுத்து விட்டனர் .ஆனால் நான் அது குறித்து வருந்தவில்லை .பிரதி சபாநாயகராக பதவியேற்று இருந்தால் இலங்கையின் வரலாற்றில் தான் இடம்பிடித்து இருப்பேன் .ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எனது பதவியை தடுத்ததன் மூலம் தமிழ் மக்கள் அனைவரினதும் மனங்களில் இடம் பிடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார் .

மேலும் விவசாய துறை பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அங்கஜன் , விவசாயம் என்பது மிகவும் முக்கியமான ஒரு துறை .எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சு பதவியை சரியான முறையில் பயன்படுத்தி யாழ் மாவட்டத்தின் விவசாயத்துறையை மேம்படுத்துவேன் என்று குறிப்பிட்டுள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.