கல்லின் மேல் மல்லாக்க படுத்துகிடந்து உடற்பயிற்சி செய்த மோடி -காணொளி இணைப்பு

0

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் உடல் வலிமையுடன் இருந்தால்தான் நாடு வலிமையுடன் இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார்.

கோலியின் சவாலினை ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி தான் உடற்பயிற்சி செய்யும் காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் .இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகின்றது .மோடி கல்லின் மேல் மல்லாக்க படுத்து கிடந்து உடற்பயிற்சி செய்வதை கிண்டல் செய்து மீம்ஸ்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன .

சுமார் 1.48 நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோவை வெளியிட்ட மோடி கர்நாடக முதல்வர் குமாரசாமி, காமன்வெல்த் போட்டிகளில் அதிக மெடல்களை வென்ற மாணிக்கா பத்ரா, 40 வயதுக்கு மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ளார். மோடியின் சவாலை இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம் .

Leave A Reply

Your email address will not be published.