கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியர் கலவியை போதித்து மாணவிகளை துஷ்பிரயோகம்! யாழ்ப்பாணத்தில் நடந்த கொடுமை

0

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கல்வி கற்கும் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பறையில் இந்த கொடுமையான சம்பவம் இடம்பெற்றுள்ளது .குறித்த ஆசிரியர் தன்னிடம் கல்வி பயில வரும் மாணவிகள் பலரை பாலியல் துரஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார் .

ஆசிரியரின் மாணவிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து ஆசிரியர் பொலிஸாரினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார் .கைது செய்ய பட்ட ஆசிரியரிடம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

ஆசிரியரின் செயலினால் கொதிப்படைந்த சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் குறித்த ஆசிரியரின் தனியார் வகுப்பறைக்கு நேற்று முன்தினம் தீ வைத்து கொளுத்தியுள்ளனர் .இதனால் வகுப்பறையில் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.