உலக நாட்டு தலைவர்கள் பிற நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளும் போது தமெக்கென பிரத்தியேக பாதுகாப்பு வீரர்கள் மற்றும் பிரத்தியேகமாக சில பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வது வழக்கம் .பிரித்தானிய மகாராணி எலிபேசத் தனது நூற்றுக்கணக்கான பாதணிகளை வெளிநாடு ஒன்றுக்கு சென்ற போது கொண்டு சென்றமை பற்றியெல்லாம் கேள்வி பட்டிருக்கின்றோம் .இவற்றுக்கு மாறாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது பிரத்தியேக கழிப்பறையை விமானத்தில் ஏற்றி சென்ற சுவாரசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடந்து முடிந்துள்ளது .இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூருக்கு பயணம் செய்த கிம் ஜோங் உன் தனது பிரத்த்தியேக கழிப்பறையை சிங்கப்பூருக்கு எடுத்து சென்றுள்ளாராம் .
அமெரிக்காவினால் தான் கொல்லப்படலாம் என்ற காரணத்தினால் பாதுகாப்பின் நிமிர்த்தம் தனது பிரத்தியேக கழிப்பறையை கிம் ஜோங் உன் சிங்கபூருக்கு எடுத்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது .