கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமிக்கு நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

0

கடந்த 25 ம் திகதி யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் ஆறு வயதுடைய ரெஜினா என்னும் சிறுமி பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் விசமியினால் கடத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார் .பாலியல் துன்புறுத்தலின் பின்னர் சிறுமியை கொலை செய்த விசமி சிறுமியின் பாடசாலை சீருடைகளை களைந்து பற்றைக்குள் மறைத்து வைத்து விட்டு சிறுமியின் சடலத்தை கிணற்றினுள் போட்டிருந்தார் .

யாழ்ப்பாணத்தை உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில் ஆறு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் .சிறுமி ரெஜினாவை கொலை செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் , சிறுமிக்கு நீதி கோரியும் தற்போது யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் .

இந்த ஆர்ப்பாட்டத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் , அரசசார்பற்ற நிறுவனங்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் .

Leave A Reply

Your email address will not be published.