காலா பார்த்து கடுப்பாகிய இலங்கை அமைச்சர் -காணொளி உள்ளே

0

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் கூட்டணியில் எடுக்கப்பட்ட காலா திரைப்படம் இலங்கை மற்றும் பல வெளிநாடுகளில் திரையிடப்பட்டுள்ளது .காலா படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்று கூறப்படுகின்றது .காலா படத்தினை பார்த்த பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயகே படத்தின் இயக்குனர் ரஞ்சித்தை விமர்சித்துள்ளார் .

ரஞ்சன் ராமநாயகே ரஜனியின் தீவிர ரசிகர் .இவர் காலா படத்தை மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் ஆவலுடன் சென்று
பார்த்துள்ளார் .படத்தினை பார்த்த அமைச்சர் கடுப்பாகி விட்டாராம் .காலாவினால் கடுப்பாகிய அமைச்சர் ரஜனிக்கு அறிவுரை கூறியுள்ளார் .

காலா படம் குறித்து ரஞ்சன் ராமநாயகே தெரிவித்த போது, தயவுசெய்து ரஞ்சித்தின் படங்களில் இனிமேல் நடிக்காதீர்கள் .ரஞ்சித்தின் படங்களில் நடித்து உங்களது தொழிலை கெடுக்காதீர்கள் .இதனை நான் உங்களது தீவிர ரசிகனாக கூறுகின்றேன் .ஒரு ரசிகன் என்ற வகையில் இதனை கூறுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்று கூறியுள்ளார் .

காலா படத்தினை விமர்சித்து ரஞ்சன் ராமநாயகே காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளார் .காணொளி தொடர்பில் ரஜனி மற்றும் ரஞ்சித்திடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லையாம் .ரஞ்சன் ராமநாயகே இலங்கை திரைப்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.