காலா ரிலீசுக்கு நடுவே அடுத்த படத்தை ஆரம்பித்த ரஜினிகாந்த்

0

ரஜினிகாந்த் நடிப்பில் `காலா’ படம் உலகமெங்கம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. #Rajinikanth #KarthikSubbaraj

ரஜினிகாந்த் நடிப்பில் `காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்திற்கும் நல்ல விமர்சனங்களே வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் இன்று துவங்கியிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ரன், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, சனத் ரெட்டி உட்பட பலரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Rajinikanth #KarthikSubbaraj

Leave A Reply

Your email address will not be published.