கோத்தபாயவின் கொடூரங்களை அம்பலப்படுத்துவேன்: எச்சரிக்கும் சிங்கள முன்னாள் அமைச்சர்

0

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலார் கோட்டாபய ராஜபக்சவினால் இழைக்கப்பட்ட கொடூரங்களை எந்தவொரு நீதிமன்றிலும் கூறத் தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் மீண்டும் சிறீலங்காவில் ஆட்சியமைக்க இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் சமூக மற்றும் மக்கள் நலனுக்கான அமைச்சராக இருந்த சர்ச்சைக்குறிய அமைச்சர் மேர்வின் சில்வா யூன் 29 ஆம் திகதி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது சூளுரைத்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த மேர்வின் சில்வா……

‘நடைபெறவுள்ளஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிவேட்பாளராகக் களமிறங்க தயாராகி வருவதாக பல்வேறு தரப்பினர் செய்தி வெளியிட்டுவருகின்றனர்.

அனைவரும் இதைப் பற்றி பேசுவதாலும் விமர்சிப்பதாலும் அவர் தன்னை ஜனாதிபதி போலபிரதிபலித்தக்கொள்கின்றார். அண்மைகாலமாக அவரின் செயற்பாடுகள் அனைத்துமே அதனையேவெளிப்படுத்துகின்றன.

சிறிலங்காவில் யுத்தம் சூடுபிடித்திருந்த நேரத்தில் அச்சமடைந்த கோட்டாபயநாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்கு சென்று ஒழிந்துக்கொண்டார். யுத்தம் உள்ளநாட்டின் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு பயத்துடன் செயற்பட்டார். இவ்வாறான நிலையில்எவ்வாறு அவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி நாட்டை காப்பாற்றுவார்?

நாட்டில் தற்போது பாதாள உலகக் கோஷ்டியினரின் செயற்பாடுகள்அதிகரித்திருக்கலாம். எனினும் கடந்த ஆட்சியின் போது அண்ணனும் தம்பியும் இணைந்துசெய்த குற்றங்கள் ஏராளமானவை. அவர்களின் குற்றச்செயல்களை நான் கண் முன்னே கண்டும்கேட்டும் உள்ளேன். அதை யாரும் கூற முன்வரமாட்டார்கள். அனால் நான் அச்சமற்றவன் எந்தநீதிமன்றிலும் அவற்றைக் கூற தயாராகவுள்ளேன்’ என்றார் மேர்வின் சில்வா

Leave A Reply

Your email address will not be published.