இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடிவருகின்றது .இன்றைய போட்டியில் 481 ஓட்டங்களை குவித்து இங்கிலாந்து அணி கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதி கூடிய ஓட்டங்களை பெற்ற அணி என்ற உலகசாதனையை நிகழ்த்தியுள்ளது .
நோட்டிங்ஹம் இல் தற்போது இடம்பெற்று வரும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாட அழைத்து .
ஆரம்பத்தில் இருந்து மிகவும் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்துள்ளனர் .
அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்புக்கு 481 ஓட்டங்களை குவித்து புதிய உலகசாதனை படைத்துள்ளது .ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சிதறடித்த ஹேல்ஸ் வெறும் 92 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் , 16 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 147 ஓட்டங்களை விளாசினார் .இங்கிலாந்து அணியின் மற்றைய வீரரான பைர்ஸ்டோவ் 92 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் , 15 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 139 ஓட்டங்களை விளாசினார் .
இதற்க்கு முன்னர் 2016 ம் ஆண்டு பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 444 ஓட்டங்களை குவித்தமையே ஒருநாள் போட்டிகளில் இன்னிங்க்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிக ஓட்டங்களாக இருந்தது .தமது முன்னைய சாதனையை இங்கிலாந்து அணியினர் தகர்த்து மீண்டும் புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்கள் .
482 என்ற இமாலய வெற்றி இலக்கினை நோக்கி ஆஸ்திரேலியா அணி துடுப்பெடுத்தாட உள்ளது .இந்த போட்டியில் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெறுவது உறுதி .எனிலும் கிரிக்கெட்டில் எதுவும் இடம்பெறலாம் .ஆகவே இங்கிலாந்தின் 481 என்ற புதிய உலக சாதனையை ஆஸ்திரேலியா தகர்த்து கிரிக்கெட்டில் புதிய வரலாற்றினை எழுதுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.