சேலை அணிந்து சாலையில் சென்ற பிரான்ஸ் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் – படங்கள் உள்ளே

0

பிரான்ஸ் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு பயணம் செய்து மனிதநேய பணிகளிகளில் ஈடுபட்டுவருகின்றனர் .

OSF (Institut D optique sans frontieres) என்ற மனித நேய அமைப்பை உருவாக்கி சேவைகளை முன்னெடுத்து வரும் இந்த பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வட, கிழக்கு சிறுவர்களை தேடிச்சென்று அவர்களை அரவணைத்து மகிழ்வித்து வருக்கின்றார்கள்.

மனிதநேய பணிகளுக்காக பல்வேறு பிரதேசங்களுக்கு சென்றுவரும் பிரான்ஸ் நாட்டு பெண் மாணவிகள் தமிழ் பெண்களின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து தமிழ் பெண்கள் போன்று காட்சியளித்துள்ளனர் .சேலை அணிந்த பிரான்ஸ் நாட்டு பெண்களை பார்த்து நம்மவர்கள் மகிழ்வடைந்துள்ளார்கள் .

வெளிநாடுகளுக்கு சென்றதும் எமது தமிழ் பாரம்பரியங்களையும் கலாச்சாரத்தினையும் உதறித்தள்ளிவிட்டு மேற்கத்தைய கலாச்சாரத்தினை பின்பற்றும் சில தமிழர்களுக்கு பின்ரன்ஸ் நாட்டு பொறியியல் பீட மாணவர்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் .

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தரும் வெள்ளைக்காரர் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி மற்றும் சேலையை விரும்பி அணிந்து வருகின்றமை எமக்கு பெருமையல்ல .அவர்களுக்கு தான் பெருமை .

Leave A Reply

Your email address will not be published.