“ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஆளுநர் ஆய்வுசெய்வாரா?” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட இன்று மதுரை வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, “விவசாயிகள் நிலத்தை விரும்பித் தருகிறார்கள் என்று முதல்வர் கூறுவது மிகப் பெரிய பொய். ஆளுநர் ஆய்வு மேற்கொள்வது தமிழக அரசை இழிவுபடுத்தும் செயல். ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநரின் ஆய்வு நடக்குமா?
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆய்வு நடத்துகிறார்களா? ஆளுநரை எதிர்த்தால் சிறை என மிரட்டுவது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதிகாரம் யார் கையில் உள்ளது என்ற சந்தேகம் எழுகிறது. தமிழகத்தில் இரட்டை அதிகாரம் உள்ளதுபோன்ற நிலை உருவாகியுள்ளது. இலங்கையைப்போல தமிழக மக்களின் நிலத்தை அபகரித்து அகதிகளாக உருவாக்க முயல்கிறது தமிழக அரசு. கார் செல்வதைப் பற்றி கவலைப்படும் அரசு, நீர் பற்றி சோறு பற்றிக் கவலைப்படவில்லை. வளர்ச்சி என்ற கவர்ச்சி வார்த்தைகள் மூலமாக அரசு மக்களை ஏமாற்றிவருகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது வேதனை” என்று கூறினார்.