பொதுபலசேனாவின் தலைவர் ஞானசாரதேரருக்கு ஒருவருட சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .2016 ஜனவரி 25ம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது குற்றம் சுமதத்தப்பட்டது .
இந்த அச்சுறுத்தல் வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது .கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு 50,000 ரூபாய் நஷ்டஈடு செலுத்துமாறும் ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இனவாதத்தை கக்கியவர் தான் இந்த ஞானசாரதேரர்.பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற சிங்கள மற்றும் முஸ்லீம் இனங்களுக்கு இடையிலான கலவரத்தின் முக்கிய சூத்திரதாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது .சிறை செல்லும் ஞானசாரதேரருக்கு இனியாவது ஞானம் பிறக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .