அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12 ம் திகதி சிங்கப்பூரில் இடம்பெற்றது .இந்த சந்திப்பின் பொது சில சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது .
மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகாராஜ் மோகன்(25). அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ரசிகராம்.டிரம்புடன் எப்படியாவது ஒரு செல்பி எடுத்துவிட வேண்டும் என்ற ஆவலில் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவின் ஷாங்ரி-லா ஓட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.38 ஆயிரம் செலவழித்து தவமாய் தமவமிருந்துள்ளார் .
வடகொரிய அதிபரை சந்திப்பதற்காக டிரம்ப் செல்லும் போது அவருடன் செல்பி எடுத்துவிடலாம் என்ற நப்பாசையில் மகாராஜ் மோகன் ஓட்டல் வரவேற்பு அறையில் 5 மணி நேரமாக அவர் சுற்றி திரிந்துள்ளார். ஆனால் அவரால் அமெரிக்க ஜனாதிபதியுடன் செல்பி எடுக்க முடியவில்லை ( ஆஹா வடை போச்சே ) .இருந்தாலும் டிரம்ப் பயன்படுத்தும் பீஸ்ட் என்ற கார் அருகே நின்று அவரால் செல்பி எடுக்க முடிந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஜ் மோகன், என்னை போன்ற சாதாரண மக்கள் டிரம்ப் உடன் செல்பி எடுப்பது என்பது சாத்தியம் இல்லாத காரியம் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் சில நேரம் எதிர்பாராதவைகளும் நடக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்த முயற்சியில் இறங்கினேன் என அவர் தெரிவித்தார்.