திடீரென தீப்பிடித்த விமானம் ! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய கால்பந்தாட்ட வீரர்கள்-காணொளி உள்ளே

0

ரஷ்சியாவில் இடம்பெற்று வரும் 21 வது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் உருகுவே அணிக்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்க சவுதி அரேபிய வீரர்கள் ராஸ்டோவ்-ஆன்-டான் சென்ற விமானத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது .எனிலும் வீரர்கள் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை .

நாளை இடம்பெற இருக்கும் உருகுவே அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் பங்கேற்க சவுதி அரேபிய வீரர்கள் மாஸ்கோவில் இருந்து ராஸ்டோவ்-ஆன்-டானுக்கு விமானம் மூலம் கிளம்பினர்.
.
விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தின் வலது பக்க இறக்கையில் உள்ள எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது. இதை உடனடியாக விமான பணியாளர்கள் கவனித்து எச்சரிக்க, விமானம் சரியான நேரத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து சவுதி அரேபிய அணி வீரர்கள் சிறு கோளாறுக்கு பின் பத்திரமாக ராஸ்டோவ்-ஆன்-டானுக்கு வந்தடைந்ததாக அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக தவகல் வெளியிட்டுள்ளது.அதிஷ்டவசமாக விமானத்தில் பயணித்த கால்பந்தாட்ட வீரர்கள் உயிர் பிழைத்துள்ளார்கள் .

Leave A Reply

Your email address will not be published.