திருமண பந்தத்தில் இணைகின்றார் கொள்கை மாறாத தமிழ்த் தேசிய அரசியல்வாதி கஜேந்திரகுமார்

0

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன் தற்போதைய செயலாளராகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவராகவும், வடக்கின் பிரபல தமிழ்த் தேசிய அரசியல்வாதியாகவும் திகழும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினம் தனது  44ஆவது வயதில் திருமண பந்தத்தில் இணைகின்றார்.

முதல் திருமணம் செய்த லண்டனில் வசிக்கும் வைத்தியர் பெண்ணை சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில் சில வருடங்களின் பின் மீண்டும் திருமண பந்தத்தில் இணைகின்றார் .

வடபுலத்தின் பிரபலமான அரசியல் தலைவராக திகழ்ந்த ஜீ.ஜீ.பொண்ணம்பலத்தின் பேரனான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் பிறந்து தனது சிறு வயது கல்வியை கொழும்பில் கற்று உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பை இங்கிலாந்தில் நிறைவுசெய்திருந்தார்.

இங்கிலாந்தில் வைத்தியராக கடமையாற்றும் தமிழ் பெண் ஒருவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் திருமணத்தின் பின் சில வருடங்களிலேயே அந்த பெண்ணிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றையதினம் காரைநகரை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சட்டத்தரணியான பெண் ஒருவரை இந்தியாவில் கரம்பிடிக்கின்றார் .தமிழ்த் தேசிய அரசியலில் கொளகை கொள்கை ஒரே பாதையில் பயணிக்கும் தமிழ் மக்களின் தற்போதைய நம்பிக்கைக்குரிய அரசியல்வாதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஈழம் நியூஸ் இணையக் குழுமம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

Leave A Reply

Your email address will not be published.