தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ! இரண்டு அவுஸ்திரேலியர்கள் பலி

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் அவுஸ்திரேலிய நாட்டினை சேர்ந்த இரண்டு பிரஜைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.மற்றும் இரண்டு அவுஸ்திரேலியர்கள் படுகாயமடைந்துள்ளனர் .

தெற்கு அதிவேக பாதையில் பயணித்துக்கொண்டிருந்த வான் அதிவேக பாதையின் குருந்துகஹஹெடெக்மா பகுதியில் 65 வது கிலோமீட்டரை கடக்கும் போது லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது .இந்த விபத்தில் ஆஸ்திரேலிய பிரஜைகள் நால்வரும் மற்றும் லொறியின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் .

சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவுஸ்திரேலிய பிரஜைகளான 37 வயதுடைய லூயிஸ் மோனிகா மற்றும் அவரது நான்கு வயதுடைய குழந்தை கொலின் பாப்பி ஆகியோர் உயிரிழந்தனர் .

இயந்திரக்கோளாறு காரணமாக அதிவேக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் அவுஸ்திரேலியர்கள் பயணித்த வான் மோதியமையின் காரணமாகவே இந்த கோர விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.