நஞ்சு அருந்திய தாயும் மூன்று பிள்ளைகளும் ! வவுனியாவில் நடந்த சோகம்

0

தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சு குடிக்க கொடுத்து விட்டு தானும் நஞ்சினை குடித்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது .நால்வரும் அதிஷ்டவசமாக உறவினர்களால் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரிவருவதாவது , வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் 3 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன் காலைவேலைக்கு சென்ற நிலையில் மனைவி தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சு மருந்தினை சோடாவுடன் கலந்து கொடுத்துவிட்டு , தானும் அதனை அருந்தியுள்ளார்.இதன்போதுஇரண்டாவது மகனான 6 வயது சிறுவன் தனது அம்மம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுஅம்மா சோடாவுடன் ஏதோ கலந்து தந்து விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது மகன் தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த அம்மம்மா உடனடியாக நஞ்சருந்திய விடயத்தினை உறவினர்களிடம் தெரிவிக்க அவர்கள் உடனடியாக விரைந்து சென்று தாயையும் மூன்று பிள்ளைகளையும் மீட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில்அனுமதித்துள்ளார்கள் .அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

40 வயதான தாய் மற்றும்12 வயது, 6 வயது, 1 1/2 வயது பிள்ளைகள் மூவரும் ஆபத்தான நிலையில் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நஞ்சு அருந்தியமைக்கான காரணம் இதுவரையில் தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள் . குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்க படுகின்றது .

Leave A Reply

Your email address will not be published.