நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்குப் பயணம்; மோடி செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

0

பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார் சமூக ஆர்வலர் பிமப்பா கதத். அவரின், கேள்விகளுக்கு அலுவலகம் அளித்த பதிலை, பிரபல ஆங்கில நாளிதழிடம் பகிர்ந்திருக்கிறார் அவர்.

அதில், `நரேந்திர மோடி பதியேற்ற நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 48 மாதங்களில் 41 முறை வெளிநாட்டுக்கு அரசுமுறைப் பயணம் செய்துள்ளார். இவரின் பயணத்துக்காக ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஜெர்மனி, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

இதற்காக, 31.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பிரதமரின் சுற்றுப் பயணத்தில் அதிகம் செலவிடப்பட்ட பயணம் இதுவாகும். இதேபோல், அண்டை நாடான பூட்டானுக்கு கடந்த 2014-ம் வருடம் சென்றார் பிரதமர். இந்தப் பயணத்துக்காக ரூபாய் 2.45 கோடி செலவிடப்பட்டது. தனது பதவிக் காலத்தில் 165 நாள்களை வெளிநாட்டுப் பயணத்தில் கழித்திருக்கிறார் மோடி. பிரதமர் மேற்கொண்ட உள்நாட்டுப் பயணச் செலவுகள், பாதுகாப்புச் செலவுகள் ஆர்.டி.ஐ. தகவலில் குறிப்பிடப்படவில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.