அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் எமி ஜாக்சன் தற்போது, நீச்சல் உடையில் பாய் பிரண்டுடன் லூட்டியடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். #AmyJackson
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சூடான படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது நடிகை எமி ஜாக்சனின் வழக்கம். சில தினங்களுக்கு முன்னாள் தனது ஜோடி என்று ஒரு பெண்ணுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர், ஒரு ஆணுடன் மிக நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு இருந்தார். நீச்சல் உடையில், முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் அந்த ஆண் நண்பர் யார் என்பதை எமி குறிப்பிடவில்லை.
தற்போது கடலில் நீச்சல் உடையில் தன்னுடைய பாய் பிரண்டின் தலைக்கு மேல் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் எமி ஜாக்சன். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மதராச பட்டிணம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருக்கும் 2.0 திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். #AmyJackson