சீனாவில் குயிங்யாங் நகரை சேர்ந்த 19 வயது பள்ளி மானவி லீ. இவரிடம் ஆசிரியர் ஒருவர் ‘செக்ஸ்’ சிலுமிஷம் செய்தார். கட்டி அணைப்பது முத்தமிடுவது போன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டார்.
இதனால் மன வருத்தம் அடைந்த மாணவி லீ அங்குள்ள ஒரு உயரமான கட்டிடத்துக்கு சென்றார். 8-வது மாடி சென்ற அவர் அங்கிருந்து தான் குத்தித்து தற்கொலை செய்ய போவதாக கூறினார்.
அதைபார்த்த சிலர் கூட்டமாக கூடினர். மாணவியை தற்கொலையில் இருந்து காப்பாற்றுவதற்கு பதிலாக அவரை கேலி கிண்டல் செய்தனர்.
இக்காட்சியை சிலர் வீடியோ படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இதைப் பார்த்த மாணவி லீயின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதைதொடர்ந்து அவரை தற்கொலைக்கு உற்சாகப்படுத்திய சிலரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது மனிதாபிமானம் இல்லாத சிலர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து மீட்பு பணி ஊழியர்கள் மாணவியை காப்பாற்ற ஓடிவந்தனர். அதற்குள் மாணவி லீ குதித்து தற்கொலை செய்து கொண்டார்.