பாவப்பட்ட பணத்தை மீளக்கொடுத்து ஈபிடிபி தவராசாவுக்கு செருப்படி! கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

0

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மக்களிடம் சேகரித்த பண பொதி வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வீட்டில் போடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வட மாகாணசபையினால் நினைவு கூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500 ரூபாய் அறவீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வட மாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடையணிந்த சிலரே நடத்தினார்கள் என கூறிய எதிர்க்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.

ஆனாலும் அந்த பணத்தினையும் சேர்த்தே நினைவேந்தல் செய்யப்பட்டது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்தார். மேலும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் அதனையே கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஒரு ரூபாய் வீதம் 7 ஆயிரம் பேரிடம் சேர்க்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வட மாகாணசபைக்கு சென்றுள்ளனர்.

எனினும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அந்த பணத்தை வாங்க மறுத்த நிலையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் அந்த பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது அவைத் தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர்,

“மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம். ஆகவே இந்த பணத்தை வாங்கி கொள்ளமாட்டோம். ஆகவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசுங்கள்” என கூறியுள்ளார்.

இந்த நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் “பாவப்பட்ட பணம்” என எழுத்தப்பட்ட குறித்த பண பொதியை போட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.