பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு அழைப்பார்கள் ! நடிகையின் அதிர்ச்சித் தகவல்..!

0

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என நடந்துவரும் பிரச்சினை ஒருபக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பு கொடுத்த நடிகையின் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.(Bigg Boss 2 casting couch problem)

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். மேலும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக நடிகை மாதவி லதா சூசகமாக தெரிவித்துள்ளார்.

அதாவது, ”பிக் பாஸ் 2” தெலுங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை அணுகினார்கள். முதல் சீசனுக்கும் கூட என்னிடம் இன்டர்வியூ செய்தார்கள். அப்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது என்று நடிகை மாதவி லதா தெரிவித்துள்ளார்.

இம்முறை ”பிக் பாஸ்” நிகழ்ச்சி குறித்து எடுத்த இன்டர்வியூ முழுக்க எனக்கு அசௌகரியமாக இருந்தது. இன்டர்வியூவுக்கு பிறகு அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை, நானும் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை என்கிறார் மாதவி லதா.

மாதவி லதா தனது பேட்டியில் அசௌகரியம் என்று கூறியது படுக்கைக்கு அழைக்கப்பட்டதை தான் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. பிக் பாஸுக்குமா படுக்கைக்கு அழைப்பார்கள் என்று மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெலுங்கு ”பிக் பாஸ்” நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு திரையுலகம் பற்றி அவ்வப்போது மோசமான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.