பிக் பாஸ் வீட்டுக்குள் மும்தாஜ்!

0

பிரசாந்த் நடித்த `சாக்லெட்’ படத்தில் `மல மல மருத மல’ பாடலுக்கு லேடீஸ் ஹாஸ்டலுக்குள் மும்தாஜ் போட்ட குத்தாட்டத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டார்கள்.

டி.ராஜேந்தரால் `மோனிசா என் மோனலிசா’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் மும்தாஜ். `குஷி’, `லூட்டி’, `வேதம்’, `செல்லமே’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும் ஹீரோயின் கனவுடன் வந்தவருக்கு செட் ஆனது என்னவோ கவர்ச்சிக் கதாபாத்திரமும் குத்தாட்ட டான்ஸும்தான். ஒரு கட்டத்தில் சினிமாவைவிட்டு ஒதுங்கியவரை இப்போது பிக் பாஸ் வீட்டுக்குக் கூட்டி வந்திருக்கிறார்கள்.

கடந்த சீஸனுக்கே அழைத்ததாகவும் அப்போது மறுத்துவிட்டவர், ஆனாலும் முதல் சீஸனை விடாமல் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. `ஓவியாவுக்குக் கிடைத்த புகழ், பரணிக்குக் கிடைத்த சினிமா வாய்ப்புகள் போன்றவைகூட இந்த சீஸனில் கலந்து கொள்ளச் சம்மதித்ததற்கான காரணங்களாக இருக்கலாம்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.